முன்னுரை :
சிவனைப்பற்றி பேசவும், எழுதவும், கேட்கவும் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஞானிகளும் முனிவர்களும் திருவண்ணாமலையைப்பற்றியும் அதன் சிறப்புகள் பலவற்றையும் பாடல்களாகவும் பதிகங்களாகவும் எழுதிவைத்திருக்க நாம் என்ன புதிதாக சொல்ல முடியும் ? சிவன் மேல் உள்ளம் உருகி காதலாகி கசிந்து கண்ணீர் மல்க எழுதிய பாடல்களை படிக்கும் போதெல்லாம் கண்ணீர் நம்மை அறியாமல் வருகிறதே இதுதான் இவர்களின் சிறப்பு. ஒரு சிறுகுழந்தை புதிதாக தான் இதுவரை பார்க்காத ஒரு அதிசயத்தை காணும்போது தன்னை அறியாமல்