300x250 AD TOP

Saturday, March 12, 2016

இந்த பிரிவின் வகையில் உள்ளது: ,

திருவண்ணாமலையும் அதிசயக் காட்சியும்


முன்னுரை :

சிவனைப்பற்றி பேசவும், எழுதவும், கேட்கவும் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஞானிகளும் முனிவர்களும் திருவண்ணாமலையைப்பற்றியும் அதன் சிறப்புகள் பலவற்றையும் பாடல்களாகவும் பதிகங்களாகவும் எழுதிவைத்திருக்க நாம் என்ன புதிதாக சொல்ல முடியும் ? சிவன் மேல் உள்ளம் உருகி காதலாகி கசிந்து கண்ணீர் மல்க எழுதிய பாடல்களை படிக்கும் போதெல்லாம் கண்ணீர் நம்மை அறியாமல் வருகிறதே இதுதான் இவர்களின் சிறப்பு. ஒரு சிறுகுழந்தை புதிதாக தான் இதுவரை பார்க்காத ஒரு அதிசயத்தை காணும்போது தன்னை அறியாமல்
தான் கண்ட சந்தோச நிகழ்வை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளுமே அதே நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம். பலருக்கு இந்த அதிசய காட்சி கிடைத்திருக்கலாம். இன்னும் சிலர் இதைப்பார்த்தும் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று பார்த்தும் பார்க்காதது போல் சென்றிருக்கலாம். இன்னும் சிலருக்கு இந்த காட்சி கிடைக்காமல் இருக்கலாம். 
சிவனுக்கு நம் மேல் அன்பு இருந்தால் தானே அவன் காட்சிகளைக்கூட ஊணக்கண்ணால் காணக்கூடிய அறிவை கொடுத்திருப்பான்.  சமீபத்தில் நாம் திருவண்ணாமலையில் மேற்கொண்ட ஒரு பயணத்தைப்பற்றியும் அங்கு மலையில் கிடைத்த காட்சியைப்பற்றியும் அதன் அனுபவத்தைப் பற்றியும் மட்டுமே இந்தப்புத்தகம் சொல்லும்.  திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வரும் போது நாம் தரிசிக்கும் ஒவ்வொரு லிங்கத்திற்கும் சொல்ல வேண்டிய ஒரே வரி மந்திரத்தையும் தெரியப்படுத்தியுள்ளோம். இந்தப்புத்தகத்தை முழுமையாக நீங்கள் படித்து முடிக்கும் போது சிவனுக்கும் நமக்குமான இடைவெளி குறைந்து நெருக்கம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.       - ஆசிரியர்.

புத்தகத்தின் விலை ரூ.25
மொத்தப்பக்கம் : 32
தமிழ்நாட்டிற்குள் மொத்தமாக 8 புத்தகம் வாங்கினால் புத்தகத்தின் விலை மற்றும் கூரியர் கட்டணத்துடன் சேர்த்து ரூ.250

தமிழ்நாட்டிற்குள் மொத்தமாக 16 புத்தகம் வாங்கினால் புத்தகத்தின் விலை மற்றும் கூரியர் கட்டணத்துடன் சேர்த்து   ரூ.470
ஆன்லைன் மூலம் புத்தகம் வாங்க இங்கு சொடுக்கவும்.

தமிழ்நாட்டை தவிர பிறமாநிலங்களில் உள்ளவர்கள் மொத்தமாக  8 புத்தகம் வாங்கினால் புத்தகத்தின் விலை மற்றும் கூரியர் கட்டணத்துடன் சேர்த்து ரூ.280

தமிழ்நாட்டை தவிர பிறமாநிலங்களில் உள்ளவர்கள் மொத்தமாக  16 புத்தகம் வாங்கினால் புத்தகத்தின் விலை மற்றும் கூரியர் கட்டணத்துடன் சேர்த்து ரூ.550


வெளிநாடு வாழ் வாசகர்களுக்கு இந்தப்புத்தகம் அனுப்ப தபால் கட்டணம் அதிகமாக வருவதால் வாசகர்கள் சேர்ந்து மொத்தமாக 200 புத்தகளுக்கு மேல் ஆர்டர் செய்யவும். எந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டுமோ அந்த நாட்டின் முகவரியை தெரிவித்து [email protected] என்ற இமெயில் முகவரியில் தெரியப்படுத்தவும். உங்களுக்கான கட்டணம் என்ன என்பதை தெரிவிக்கிறோம்.

ஒவ்வொரு புத்தகத்துடனும் திருவண்ணாமலையில் கிடைத்த காட்சியின் புகைப்படம் தனித்தனியாக ஒவ்வொரு புத்தகத்திற்கும் வழங்கப்படும், உதாரணமாக 8 புத்தகம் வாங்குகிறீர்கள் என்றால் 8 தனி புகைப்படம் உங்களுக்கு வழங்கப்படும் அதோடு அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்த திருநீரும்  வழங்கப்படும்.